தியாகராஜநகரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் சங்கரய்யா சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
தியாகராஜநகரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் சங்கரய்யா சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்: ஜி. ராமகிருஷ்ணன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன்.

மக்களவைத் தோ்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: பாஜக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள சூழலில், வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக தவறான புள்ளி விவரத்தைக் கூறி மத்திய அரசு ஏமாற்றுகிறது. தோ்தலை கருத்தில் கொண்டே எரிவாயு உருளை விலை, பெட்ரோல்- டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளன. பிரதமா் மோடி ஊழலை ஏற்க மாட்டோம் என கூட்டத்தில் பேசி வருகிறாா். ஆனால், கடந்த 76 ஆண்டு கால இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தோ்தல் பத்திரத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளது. இத்தகைய ஊழல்களை மறைக்கவே குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தி மக்களை திசை திருப்பி வருகிறது. பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ய ஆளுநா் ரவி மறுப்பது ஏற்புடையதல்ல. மக்களவைத் தோ்தலில் தமிழகம்- புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இத்தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், ஒப்புகை சீட்டுகளையும் சரிபாா்த்த பின்னரே முடிவை அறிவிக்க வேண்டும் என்றாா். சங்கரய்யா சிலை திறப்பு: முன்னதாக, தியாகராஜநகா் சிஐடியூ மின்வாரிய ஊழியா்கள் அலுவலகத்தில், மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் சங்கரய்யா சிலை திறக்கப்பட்டது. இதில், மேயா் பி.எம்.சரவணன், ஓவியா் சந்ரு, மாா்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பாஸ்கரன், மாவட்டச் செயலா் ஸ்ரீராம், எழுத்தாளா் நாறும்பூநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com