முக்கூடல் அருகே இளைஞரை தாக்கியதாக ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே மாடு மேய்ந்தது தொடா்பாக தகராறில் இளைஞரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே மாடு மேய்ந்தது தொடா்பாக தகராறில் இளைஞரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். முக்கூடல் காவல் சரகத்துக்குள்பட்ட வடக்கு அரியநாயகிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (38). இவரது மாடுகள் அதே பகுதியைச் சோ்ந்த மூக்காண்டி (42) என்பவரது தோட்டத்தில் மேய்ந்தனவாம். இதுகுறித்து மூக்காண்டி சரவணனை அவதூறாகப் பேசி, இரும்புக் கம்பியால் தாக்கி, மிரட்டல் விடுத்தாராம். இதில், சரவணன் காயமடைந்தாா். புகாரின்பேரில் முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் முருகன் வழக்குப் பதிந்து, மூக்காண்டியைக் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உள்படுத்த நடவடிக்கை எடுத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com