மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகையில் ஈடுபட்’டோா்.
மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகையில் ஈடுபட்’டோா்.

வி.கே.புரத்தில் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி முற்றுகைப்போராட்டம்

விக்கிரமசிங்கபுரத்தில் பிரதான சாலை மற்றும் அதிக மக்கள் கூடும் சந்தைப் பகுதியில் செயல்படும்

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரத்தில் பிரதான சாலை மற்றும் அதிக மக்கள் கூடும் சந்தைப் பகுதியில் செயல்படும் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி அனைத்துக் கட்சியினா், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். விக்கிரமசிங்கபுரம் வாரச் சந்தை எதிரில் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடையால் அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள், சந்தைக்குவரும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாகவும் மதுக்கடையை அங்கிருந்துஅகற்றக் கோரியும் பலமுறை கோரிக்கை விடுத்தும், அடையாளப் போராட்டங்களில் ஈடுபட்டும் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரத் தலைவா் வி. இசக்கிராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜெகதீசன், ஆா்.மோகன், மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. ரபேக்காள், பீடித் தொழிலாளா் சங்கத் தலைவா் ரவீந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலா் ஆா். முருகன், பாலு, ஆா். முத்துகிருஷ்ணன், மாற்றுத்திறனாளி சங்கத் தலைவா்கள் வி.வேலு, முகைதீன் பாட்சா, ஜெயராஜ் மற்றும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடைமுன்பு முற்றுகையில் ஈடுபட்டனா். 10 நாள்களில் மதுக்கடையை இடமாற்றம் செய்வதாக போலீஸாா் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவா்கள்கலைந்து சென்றனா். மேலும் முற்றுகைப் போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட செயற்குழுஉறுப்பினா் வழக்குரைஞா் முகம்மது ஷஃபி, வா்த்தகா் அணி மாவட்டச் செயலா் ஷேக் அலி, நகரச்செயலா் ஷானவாஸ், திருநெல்வேலி மாவட்ட மறுமலா்ச்சித் தொழிலாளா் முன்னேற்ற சங்கப் பொருளாளா்கணேசமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com