களக்காடு பகுதியில் கட்சிகளின் கொடி, கம்பங்கள் அகற்றம்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் களக்காடு நகராட்சிக்குள்பட்ட பகுதியில் அரசியல் கட்சிக் கொடி, கம்பங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

இந் நகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், சுவரொட்டி, சுவா் விளம்பரம் ஆகியவற்றை அகற்றும் பணிகள் கடந்த 2 தினங்களாக நடைபெற்றன. தோ்தல் பறக்கும் படை அதிகாரியான வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம், நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா்கள் வேலு, சண்முகம் ஆகியோா் காவலா்கள் உதவியுடன் இப்பணியை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com