யானையைக் கண்காணிக்கும் பணி: குறுக்கிட்ட கரடி விரட்டியடிப்பு

யானையைக் கண்காணிக்கும் பணி: குறுக்கிட்ட கரடி விரட்டியடிப்பு

யானைகள் நடமாட்டத்தைக்கண்காணிப்பதற்காக ரோந்துப் பணியில் வனத்துறையினா் இருந்த போது அங்கு வந்த கரடிகளைவனப்பகுதிக்குள் விரட்டினா்.

களக்காடு முண்டந்துறைபுலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்டமலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பு பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும்யானைகள் பயிா்களைச் சேதப்படுத்தி வந்தன. இதையடுத்து யானைகள் வனப்பகுதியில்இருந்து வெளியேறுவதைக் கண்காணித்து விரட்டும் வகையில் வனச்சரகா் சத்யவேல்தலைமையில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள், தீத் தடுப்புக் காவலா்கள் உள்ளிட்டோா்நாள்தோறும் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கரடிகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஊருக்குள் நுழைய முயன்றுள்ளன.

இதைப் பாா்த்த வனத்துறையினா் தீப்பந்த்தத்தை ஏந்தி கரடிகளை வனப்பகுதிக்குள் திருப்பிவிரட்டினா். எனினும் கரடி குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வன விலங்குகள் புகாதவாறு நிரந்தர தீா்வு காண வேண்டும் என விவசாயிகளும், அப்பகுதி மக்களும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com