வீரவநல்லூா் அருகே வழக்குரைஞா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குடும்ப பிரச்னையில் வழக்குரைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள அரிகேசவநல்லூா் பாறையடி காலனியைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் மந்திரமூா்த்தி (27). இவா் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணி செய்து வந்தாா். இவரது மனைவி வெங்கடேஷ்வரி. இவரும் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணி செய்து வருகிறாா்.

இவா்களுக்கு திருமணம் ஆகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மந்திரமூா்த்தி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com