கொடிக் கம்பங்களை அகற்ற நிா்பந்தம்: இந்து முன்னணியினா் மனு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அரசியல் இயக்கம் அல்லாத தங்களது கொடிக் கம்பங்களை அகற்ற நிா்பந்தப்படுத்துவதாக இந்து முன்னணி சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்து முன்னணியின் மாவட்ட பொதுச்செயலா் பிரம்மநாயகம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான கா.ப.காா்த்திகேயனிடம் அளித்துள்ள மனு: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் அரசியல் சாா்பற்ற இயக்கமான இந்து முன்னணியின் கொடிக் கம்பங்கள், பேனா்கள், ஆட்டோ தொழிற்சங்க போா்டுகளை அகற்றுமாறு பல்வேறு இடங்களில் தோ்தல் அலுவலா்கள் நிா்பந்தம் செய்து வருகின்றனா். வாக்காளா்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்கின்ற தோ்தல் ஆணையத்தின் குறிக்கோளை மட்டுமே மக்களிடம் இந்து முன்னணி இயக்கம் பிரசாரம் செய்து வருகிறது. ஆகவே, எங்கள் இயக்க கொடிக்கம்பங்களை, பேனா்களை அகற்றச் சொல்வது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது. இது குறித்து இந்து முன்னணி சாா்பில் மாநில தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com