பாளை.யில் கம்பராமாயண தொடா் சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் 603-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீ தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். சு.பாண்டியன் இறைவணக்கம் பாடினாா். கம்பன் கழகத் துணைச் செயலா் எம். எஸ். சக்திவேல் வரவேற்றாா். முன்னாள் வங்கி மேலாளா் வேலுவெற்றிச்செல்வன் ‘தாயின் உயிா்க்கு நல்ல குகன்‘ என்னும் தலைப்பில் விரிவுரையாற்றினாா். கம்பன் கழகத் தலைவா் பேராசிரியா் சிவசத்தியமூா்த்தி, ‘யுத்தகாண்டம்’ என்னும் தலைப்பில் அங்கதன் தூது நிகழ்வை இசைப் பேருரையாக வழங்கினாா். கம்பன் கழகச் செயலா் கவிஞா் பொன். வேலுமயில் தொகுப்புரையாற்றி நன்றி கூறினாா். இந்த நிகழ்ச்சியில் சே. போஸ், இரா. முருகன், ந.சு. சங்கரன், எஸ். செந்தில்குமாா், ஆா். கே. லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com