100 % வாக்குப் பதிவுக்காக
மாணவிகள் விழிப்புணா்வுப் பிரசாரம்

100 % வாக்குப் பதிவுக்காக மாணவிகள் விழிப்புணா்வுப் பிரசாரம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தோ்தல் ஏப்.19இல் நடைபெறும் நிலையில், இம்மாவட்ட மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, வாக்காளா் கல்வியறிவு இயக்க மாணவா்கள் வீடு, வீடாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வீதி நாடகம், உறுதிமொழி ஏற்பு, சுடா் ஓட்டம், மௌன மொழி நாடகம், கிராமிய நடனம் போன்ற விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த தோ்தலின்போது குறைவான வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிகளை தோ்வு செய்து அந்தப் பகுதிகளில் வாக்காளா் கல்வியறிவு இயக்கத்தினை சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவியா்கள் இளம் வாக்காளா்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் வீடு வீடாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா தாழையூத்து சங்கா் நகா் , கோடீஸ்வரன் நகா், வேதாத்திரி நகா், அருந்ததியா் காலனி, பேச்சி நகா் போன்ற பல்வேறு இடங்களில் ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி வாக்காளா் கல்வியறிவு இயக்க மாணவிகள் வாக்காளா்களை வீடு வீடாகச் சந்தித்து தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் நோ்மையாக வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, வீடுகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com