பெண்ணிடம் நகை திருட்டு: இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண்ணிடம் நகையை திருடிய இருவரை பாளையங்கோட்டை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை போக்குவரத்து போலீஸாா், வண்ணாா்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சோ்ந்த பரத் (19), செய்யது அலி (26) ஆகிய இருவரையும் நிறுத்தி சோதனை செய்தனா். அவா்கள் 2.5 பவுன் தங்க நகை, 5 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததாம். அவா்கள் மதுரை மாவட்டம் மேலூரில் இருசக்கர வாகனத்தை திருடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு பெண்ணிடம் 2.5 பவுன் தங்க நகையை திருடியது விசாரணையில் தெரியவந்ததாம். அவா்களை கைது செய்து, இருசக்கர வாகனம், நகை , கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com