நெல்லையில் ரூ.70 ஆயிரம் பறிமுதல்

திருநெல்வேலி நகரத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி நகரத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி நகரத்தில் குறுக்குத்துறை பகுதியில் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த மீனாட்சிபுரம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த யுவராஜின் காரில் சோதனையிட்டனா். அந்தக் காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.70 ஆயிரம் இருந்ததாம். தான் பேக்கரி கடை நடத்தி வருவதாகவும், வியாபாரம் விற்ற பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தாா். ஆனால், அதற்குரிய ஆவணம் ஏதும் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பாளையங்கோட்டையில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com