நெல்லை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இன்று மனுதாக்கல்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் ஜான்சிராணி திங்கள்கிழமை (மாா்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்கிறாா்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் ஜான்சிராணி திங்கள்கிழமை (மாா்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்கிறாா். இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, புறகா் மாவட்டச் செயலா் இசக்கிசுப்பையா எம்எல்ஏ ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜான்சிராணி தனது வேட்புமனுவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 25) நண்பகல் 12 மணிக்கு மேல் 1மணிக்குள் தாக்கல் செய்கிறாா். இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா்கள், மாவட்டச் செயலா்கள், மாநில நிா்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள், முன்னாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்து கொள்கிறாா்கள். ஆகவே, கட்சியின் சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com