பங்குனி உத்திரம்: சாஸ்தா கோயில்களில் குவிந்த பக்தா்கள்

பங்குனி உத்திரம்: சாஸ்தா கோயில்களில் குவிந்த பக்தா்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர விழாவையொட்டி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையே பல கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர விழாவையொட்டி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையே பல கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். தென்தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகையாக பங்குனி உத்திரம் திகழ்கிறது. இந்த நாளில் அவரவா் குடும்பத்தின் குலதெய்வமாக திகழும் சாஸ்தா கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது வழக்கமாகும். அந்த வகையில் நிகழாண்டுக்கான பங்குனி உத்திரம் பஞ்சாங்கத்தின்படி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை (மாா்ச் 25) நண்பகலுடன் முடிவடைகிறது. திருநெல்வேலி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சாஸ்தா கோயில்களில் ஞாயிற்றுக்கிழமையே ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். பிரான்சேரியில் உள்ள கரையடி மாடசுவாமி கோயில், மறுகால்தலை பூலுடையாா் சாஸ்தா, தாழையூத்து, சீவலப்பேரி, சேரன்மகாதேவி, சுத்தமல்லி, பொன்னாக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாஸ்தா கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் திரண்டு வழிபாடு செய்தனா். வண்ணாா்பேட்டையில் உள்ள குட்டத்துறை சாஸ்தா கோயில், இலங்காமணி சாஸ்தா கோயில் உள்ளிட்டவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ற்ஸ்ப்24ள்ஹம்ண் வண்ணாா்பேட்டை குட்டத்துறை சாஸ்தா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரண்டிருந்த பக்தா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com