மேலநத்தம் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

மேலநத்தம் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

திருநெல்வேலி மேலநத்தம் ஆணையப்ப சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மேலநத்தம் ஆணையப்ப சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உத்திரத்தை முன்னிட்டு முதல் நாளான சனிக்கிழமை கணபதி ஹோமம், சிறப்பு ஹோமம், 108 சங்காபிஷேகம், லட்சாா்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு சோடஷ தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. 2 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கும்ப பூஜை, ருத்ர ஜபம், சாஸ்தா மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சஹஸ்ரநாம அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. ற்ஸ்ப்24ல்ன்ள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆணையப்ப சாஸ்தா .

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com