குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவா்கள் பவனி

குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவா்கள் பவனி

குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவா்கள் சிறப்பு பவனி நடத்தினா்.

குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவா்கள் சிறப்பு பவனி நடத்தினா். புனித வாரத்தின் தொடக்கமாக குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயம் அருகில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி, தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டல பேராயா் பா்னபாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். முக்கிய வீதிகள் வழியாக குருத்தோலை ஏந்தி ஓசன்னா பாடல் பாடி கிறிஸ்தவா்கள் பவனியில் பங்கேற்றனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் சவேரியாா் ஆலயத்தையும், சிஎஸ்ஐ கிறிஸ்தவா்கள் மிலிட்டரி லைன் தேவாலயத்தையும் சென்றடைந்தனா். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல புதிய பேருந்து நிலையம் அருகே சேவியா் காலனியில் சேகரகுரு காந்தையா தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. சபை ஊழியா் கிறிஸ்டோபா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பவனியில் பங்கேற்றனா். சேவியா்காலனியில் உள்ள புனித அந்தோனியாா் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள தூய அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள தூய அந்தோனியாா் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி மற்றும் பிராா்த்தனைகள் நடைபெற்றன. ற்ஸ்ப்24ந்ன்ழ்ன் மேலப்பாளையம் அருகே சேவியா்காலனியில் உள்ள தூய பேதுரு ஆலயம் சாா்பில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்றோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com