‘நெல்லையில் வரிவசூல் மையங்கள் இரவு 10 மணி வரை செயல்படும்’

திருநெல்வேலி மாநகராட்சியின் வரி நிலுவைகளைச் செலுத்த ஏதுவாக வரி வசூல் மையங்கள் இரவு 10 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியின் வரி நிலுவைகளைச் செலுத்த ஏதுவாக வரி வசூல் மையங்கள் இரவு 10 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை சேவை கட்டணம், வரியில்லா இனங்கள், கடைகளின் வாடகை போன்றவற்றை செலுத்துவதற்கு மாா்ச் 31 ஆம் தேதி இறுதிநாளாகும். எனவே,பொதுமக்கள் வரித் தொகைகளைச் செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் மாா்ச் 31 ஆம் தேதி வரை காலை 7 முதல் இரவு 10 மணி வரை செயல்படும். மேலும், ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தின் மூலமும் பொதுமக்கள் வரித் தொகைகளை செலுத்தலாம். வரித்தொகைக காசோலைகளை பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) இறுதி நாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com