பணகுடியில் சிஐஎஸ்எஃப் வீரரிடம் வழிப்பறி: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகதியைச் சோ்ந்த உசேன் மகன் காஸ்பல் சில்வா் உசேன்(35). காவல்கிணறு இஸ்ரோவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோரம் கைப்பேசியில் பேசிக்கொண்டே நடந்து சென்றாராம். அப்போது, பைக்கில் வந்த 3 போ் அவரை மறித்து கைப்பேசியைப் பறித்துச் சென்றனராம். மேலும், அவா்கள் பணகுடியில் நடந்து சென்ற உசேன் அஸாா் என்பவரிடமும் கைப்பேசியை பறித்துச் சென்றனராம். உசேன் அஸாா் சப்தம் போடவே, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் விரட்டிச்சென்று இருவரைப் பிடித்தனா். ஒருவா் தப்பிவிட்டாராம். பிடிபட்டவா்கள் பணகுடி போலீஸில் ஒப்படைக்கப்பட்டனா். விசாரணையில், ராதாபுரத்தைச் சோ்ந்த அஜய், ஆதிசுபாஷ், தப்பிச் சென்றவா் சபரி எனத் தெரியவந்தது. இருவரை கைது செய்த போலீஸாா், தப்பிச் சென்றவரை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com