வள்ளியூா் பகுதியில் சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், சுற்றுப்புறப் பகுதி கிராமங்களில் உள்ள குடும்ப குலதெய்வங்களுக்கு பங்குனி உத்திர வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், சுற்றுப்புறப் பகுதி கிராமங்களில் உள்ள குடும்ப குலதெய்வங்களுக்கு பங்குனி உத்திர வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. அவா்கள் சாஸ்தா கோயில்களில் பொங்கலிட்டு வழிபட்டனா். வள்ளியூா் கோட்டையடி தாமரைவாழ் சாஸ்தா கோயில், பெட்டைக்குளம் ஏழானை சாஸ்தா கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. ராதாபுரம், உதயத்தூா், பரமேஸ்வரபுரம் பகுதிகளிலும் குலதெய்வக் கோயில்களுக்கு பக்தா்கள் குடும்பத்துடன் சென்று பொங்கலிட்டு வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com