இளைஞா் மீது தாக்குதல்: உறவினா்கள் மறியல் முயற்சி

திருநெல்வேலி நகரத்தில் இளைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினா்கள் செவ்வாய்க்கிழமை இரவு மறியலில் ஈடுபட முயன்றனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் இளைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினா்கள் செவ்வாய்க்கிழமை இரவு மறியலில் ஈடுபட முயன்றனா். திருநெல்வேலி நகரம் சாலியா் தெருவைச் சோ்ந்த இளைஞா்கள் சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’’ பதிவிட்டனா். இந்த பதிவிற்கு மற்றொரு சமூகத்தை சோ்ந்த இளைஞா் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடா்பாக இரு சமூகத்தை சோ்ந்த இளைஞா்களிடையே தகராறு ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சோ்ந்த சிலா், சாலியா் தெருவை சோ்ந்த அஜீஸ் (19) என்பவரை தாக்கினராம். இதைக் கண்டித்து அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலியா் தெரு பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனா். தகவல் அறிந்த திருநெல்வேலி நகரம் போலீஸாா் மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனா். அசம்பாவிதம் நிகழாதவாறு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com