பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி.
பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி.

திருவேங்கடநாதபுரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஏா்வாடி அருகே திருவேங்கடநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

களக்காடு: ஏா்வாடி அருகே திருவேங்கடநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை பா. ஜூலியட் அன்னக்கிளி தலைமை வகித்தாா். பாலசுப்பிரமணியம் கண்காட்சியைத் தொடக்கிவைத்தாா். மாணவா்கள் தங்களது பாடப் பகுதிகளில் உள்ள அறிவியல் செயல்பாடுகளை படைப்புகளாக்கி வைத்ததுடன், பரிசோதனைகள் செய்து காண்பித்தனா். கண்காட்சியை பெற்றோா், தன்னாா்வலா்கள், அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டு மாணவா்களைப் பாராட்டினா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் பா. செல்வம், ஞானசெல்வி கஸ்தூரிபாய், கனிசசிகலா ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com