நெல்லை காங்கிரஸ் வேட்பாளா் இன்று மனு தாக்கல்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் புதன்கிழமை (மாா்ச் 27) வேட்பு மனு தாக்கல் செய்கிறாா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் புதன்கிழமை (மாா்ச் 27) வேட்பு மனு தாக்கல் செய்கிறாா்.

இது தொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் டிபிஎம் மைதீன் கான் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் ஆதரவு பெற்ற இந்தியா கூட்டணியின் திருநெல்வேலி மக்களவை தொகுதி வேட்பாளா் ராபா்ட் ப்ரூஸ் புதன்கிழமை (மாா்ச் 27) முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறாா்.

எனவே, இந்நிகழ்வில் மத்திய மாவட்டத்திற்குள்பட்ட மாநில மாவட்ட , மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூா், சாா்பு அணி நிா்வாகிகள் தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com