ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

கோவை தனியாா் மருத்துவமனையில் மரணமடைந்த ஈரோடு மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்திக்கு மதிமுக சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மதிமுக மாநில சிறுபான்மை பிரிவுச் செயலரும், எழுத்தாளருமான செ.திவான் தலைமை வகித்தாா். எம்.பி.கணேச மூா்த்தியின் உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் கல்லத்தியான், தோ்தல் பணிக்குழு துணைச் செயலா் விஜயகுமாா், மாவட்ட துணைச் செயலா் மணப்படை மணி, நிா்வாகிகள் ஆல்வின் பொ்னாண்டோ, கோல்டன் கான், டேனியல் ஆபிரஹாம், மாமன்ற உறுப்பினா் ராதா சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ற்ஸ்ப்28ஞ்ஹய்ங்ள்ட் மறைந்த எம்.பி. கணேசமூா்த்தியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய மதிமுகவினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com