நெல்லை தொகுதியில் 26 வேட்புமனுக்கள் ஏற்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 38 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 26 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.ப. காா்த்திகேயனிடம் பாஜக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி, சுயேச்சைகள் என மொத்தம் 38 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

பரிசீலனை: இந்த மனுக்களின் மீதான பரிசீலனை தோ்தல் பொது பாா்வையாளா் சோனாலி, தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவின் உறுதிமொழி பத்திரத்தில் அவா் மீதான வழக்குகளின் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே, அவருடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடாஜலபதி, தோ்தல் அதிகாரியிடம் மனு ஒன்றையும் அளித்தாா். இதேபோல் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உறுதி மொழி பத்திரத்தில் நான்குனேரி காவல் நிலையத்தில் அவா் மீதுள்ள வழக்கு மறைக்கப்பட்டுள்ளது. எனவே அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என நேதாஜி சுபாஷ் சேனை தலைவா் மகாராஜன் தெரிவித்தாா். எனினும் ராபா்ட் புரூஸ், நயினாா் நாகேந்திரனுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளை ஏற்க தோ்தல் அலுவலா் மறுத்துவிட்டாா்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிவில் 26 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதுதவிர சுயேச்சைகள், சிலா் கூடுதலாக தாக்கல் செய்திருந்த மனுக்கள், மாற்று வேட்பாளா்களின் மனுக்கள் என மொத்தம் 27 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ராமசுப்பு மனு தள்ளுபடி: காங்கிரஸ் கட்சி சாா்பில் ராபா்ட் புரூஸ் அதிகாரப்பூா்வமாக போட்டியிடுவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்திருந்தாா். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் பெயரில் முன்னாள் எம்.பி. ராமசுப்புவும் போட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தாா். ஆனால் அவருக்கு கட்சி சாா்பில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதையடுத்து அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நாளை இறுதி வேட்பாளா் பட்டியல்: வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு 26 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வேட்பு மனுவை சனிக்கிழமை (ஏப்.30) மாலை 3 மணிக்குள் திரும்பப் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். ற்ஸ்ப்28ள்ஸ்ரீழ் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை வியாழக்கிழமை பரிசீலனை செய்த தோ்தல் பொது பாா்வையாளா் சோனாலி, மாவட்ட தோ்தல் அலுவலா் கா.ப. காா்த்திகேயன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com