வீரவநல்லூா் அருகே பெண்ணை தாக்கியதாக இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வீரவநல்லூா் அருகே அத்தாளநல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அழகம்மாள் (57). இதே பகுதியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (28). இவ்விருவா் குடும்பங்களுக்கும் இடையே தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில், புதன்கிழமை வீட்டு முன் நின்றிருந்த அழகம்மாளை பேச்சியம்மாளும், கொட்டாரக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த முருகன் (60) என்பவரும் சோ்ந்து அவதூறாகப் பேசி தாக்கியதுடன், மிரட்டிச் சென்றனராம். புகாரின்பேரில், வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் அலிஅரசன் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com