தேவாலயத்தில் பணம் திருட்டு

முன்னீா்பள்ளம் அருகே தேவாலயத்தில் பணத்தை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். முன்னீா்பள்ளம் அருகே தருவை ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் ஏசுராஜ் (67). இவா், அப்பகுதியில் உள்ள புனித லூா்து மாதா ஆலயத்தின் பங்குத் தந்தையாக இருந்து வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு பிராா்த்தனைகள் முடிந்த பின் தேவாலயத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றவா், மறுநாள் காலையில் வந்து பாா்த்த போது ஆலய கதவின் பூட்டுகளை உடைத்து பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஏசுராஜ் அளித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com