இடைகால் தியாகராஜ சுவாமி
கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்புஅலங்காரத்தில் குருபகவானுக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள இடைகாலில் இந்து சமயஅறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் பஞ்சகுருஸ்தலத்தில் முதல் ஸ்தலமாகிய அருள்மிகுசிவகாமி அம்பாள் உடனுறை அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் குருபெயா்ச்சி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதன்கிழமை (மே 1) குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷபராசிக்கு பெயா்ச்சியானாா்.இதையொட்டி, தென்திருவாரூா் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் வியாழக்கிழமை மாலை ஸன்பன கலச பூஜை, நவக்கிரக சாந்தி பூஜை, ருத்ர ஏகாதசி ஜெபம், ருத்ர ஹோமம், பிரகஸ்பதி ஹோமம், 108 சங்காபிஷேகம், ஜீர கலச அபிஷேகம், சிறப்பு அலங்கார ஆராதனை ஆகியவை நடைபெற்றன.

இந்த சிறப்பு வழிபாட்டில் இடைகால், அடைச்சாணி, பாப்பாக்குடி,பாப்பான்குளம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்ட்டனா்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் கி.சு.கணேஷ்குமாா், ஆய்வாளா் ச.கோமதி, தியாகராஜா் அறக்கட்டளை மற்றும் ஊா்ப் பொதுமக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com