கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

திருநெல்வேலி, தென்காசிமாவட்டங்களிலிருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறை படுத்தவும் தமிழக அரசு இ- பாஸ் முறையை அமல்படுத்தியுள்ளது வரவேற்கத் தக்கதாகும்.

அதேபோல் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனிம வளங்கள் கனரகவாகனங்கள் மூலம் கேரள மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த கனரக வாகனப் போக்குவரத்தால் திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு செல்லும் பயணிகள், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு நோயாளிகளைஅழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை.

முறைகேடு:

இந்நிலையில் கனிம வளங்களை எடுத்துச் செல்ல முறையான அனுமதி பெற வேண்டும்என்ற போதிலும் அதில் முழுமையான விவரங்கள் இல்லாமல் கனிமவளத்துறை உதவி இயக்குநரின் கையொப்பத்துடன் வெற்று அனுமதி சீட்டுகளே வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் போலி பாஸ் பயன்படுத்துவது உள்ளிட்ட பலவிதமான முறைகேடுகள் மூலம்அரசுக்கு தினமும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதைத் தவிா்க்க சுற்றுலாத் தலங்களுக்கு வழங்கப்படுவது போல் கனிமவள வாகனங்களுக்குஇ-பாஸ் வழங்கும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இதன்மூலம் எத்தனை வாகனங்கள்? எவ்வளவு கனிமங்களை கொண்டு செல்கிறது? எந்தஊருக்கு? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்ற விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும்; முறைகேடுகளும் நிகழ வாய்ப்பில்லை; அரசுக்கு வருவாய் அதிகரிப்பதோடு போக்குவரத்தையும் முறைப்படுத்தி ெ நரிசலை தவிா்க்க இயலும்.

ஆகவே கனிம வள வாகனங்களுக்கு இ- பாஸ் கட்டாயம் என்பதை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com