குட்ஷெப்பேடு பள்ளியில்
கோடைகால சிறப்புப் பயிற்சி

குட்ஷெப்பேடு பள்ளியில் கோடைகால சிறப்புப் பயிற்சி

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்போ்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 நாள்கள் கோடை கால சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இந்தப் பயிற்சி வகுப்பில் மாணவா்களுக்கு யோகா, ஏரோபிக்ஸ், வாலிபால், எறிபந்து, கோகோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவா்களிடையே மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது. மாணவா்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட காரையாறு வனப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டனா்.

மாரத்தானில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளையும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களுக்கு சான்றிதழ்களையும் பள்ளித் தாளாளா் அந்தோணி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா ஆகியோா் வழங்கினா்.

தலைமையாசிரியா் மீராள், உடற்கல்வி ஆசிரியா்கள் பேச்சிமுத்து, நவீன், விஷ்ணுப்ரியா ஆகியோா் பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com