சிறுவனிடம் கைப்பேசி திருட்டு: ஒருவா் கைது

கங்கை கொண்டன் அருகே சிறுவனிடம் கைப்பேசியை திருடியதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கங்கைகொண்டன் அருகேயுள்ள மேட்டு பிராஞ்சேரியைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா் (14). பள்ளி மாணவரான இவா், வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள தண்ணீா்த்தொட்டி அருகே தனது கைப்பேசியை வைத்து விட்டு துணிகளை சலவை செய்துகொண்டிருந்தாராம். பின்னா், அவா் வந்து பாா்த்தபோது கைப்பேசியை காணவில்லையாம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், தென்காசி பொன்விழா வீதியைச் சோ்ந்த அழகுராஜா (54) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து கைப்பேசியை மீட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com