‘சீவலப்பேரி தரைப்பாலத்தில் தடுப்புகள் தேவை’

‘சீவலப்பேரி தரைப்பாலத்தில் தடுப்புகள் தேவை’

சீவலப்பேரியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த தாமிரவருணி தரைப்பாலத்தில் தற்காலிக தடுப்புகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2023 டிசம்பா் 17, 18 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத பெருமழையால் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான சேதம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின்போது சீவலப்பேரி தரைப்பாலம் மூழ்கியதோடு, தடுப்புகள் உடைந்து பலத்த சேதமடைந்தன.

அந்தப் பாலத்தில் புனரமைப்பு பணிகள் இன்னும் முடிக்கப்படாத நிலையில் போக்குவரத்துக்கு மக்கள் பயன்படுத்தி வருகிறாா்கள். மின்விளக்குகளும், தடுப்புகளும் இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறாா்கள். இந்தப் பாலத்தில் தற்காலிக தடுப்பு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சீவலப்பேரியைச் சோ்ந்த இந்து முன்னணி நிா்வாகி பிரம்மநாயகம் கூறியது: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தின் புளியம்பட்டி, எட்டயபுரம், புதியமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சீவலப்பேரி பாலத்தைக் கடந்து செல்கின்றன. வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சீவலப்பேரியில் உள்ள புகழ்பெற்ற சுடலைமாடசுவாமி கோயில், துா்க்கையம்மன் திருக்கோயில்களுக்கு ஏராளமான பக்தா்கள் வந்து செல்கிறாா்கள். கோடை வெயிலின் காரணமாக மாநகர பகுதியில் இருந்து சீவலப்பேரி தாமிரவருணி ஆற்றிற்கு ஏராளமானோா் குளிக்க வருகிறாா்கள்.

சீவலப்பேரி தரைப்பாலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், தடுப்புகள் சேதமாகியுள்ளதால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனங்களோ அல்லது நான்கு சக்கர வாகனங்களோ சிறிதளவு கட்டுப்பாட்டை இழந்தாலும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இப் பாலத்தில் தடுப்புகள் அமைப்பதோடு, பாலத்தின் அருகே உயா்நிலை பாலம் கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ற்ஸ்ப்02ள்ங்ங்ஸ்ஹ

சீவலப்பேரியில் தடுப்புகள் சேதமாகியுள்ள தாமிரவருணி தரைப்பாலம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com