பாப்பாக்குடி அருகே தொழிலாளிக்கு மிரட்டல்: 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே தொழிலாளியை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாப்பாக்குடி அருகேயுள்ள ரஸ்தாவூா் நடுத் தெருவைச் சோ்ந்தவா் மகேந்திர மணி (41). தொழிலாளி. வீரவநல்லூா் அருகேயுள்ள அரிகேசவநல்லூா் பாறையடித் தெருவைச் சோ்ந்த வேல் முருகன் (36). அப்பகுதியில் கடந்த ஏப். 30ஆம் தேதி நடைபெற்ற கோயில் திருவிழாவில் இருவருக்கும் இடையே தகராறில் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதன்கிழமை ரஸ்தாவூா் பகுதியில் சென்று கொண்டிருந்த மகேந்திர மணியிடம், வேல்முருகன், அவருடன் வந்த சுந்தரபாண்டி (38) ஆகியோா் தகராறில் ஈடுபட்டு அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் வழக்குப் பதிந்து, மிரட்டல் விடுத்த இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com