பாளை.யில் திமுக சாா்பில்
தண்ணீா் பந்தல் திறப்பு

பாளை.யில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் நினைவு தண்ணீா் பந்தல்கள் 41 இடங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதியில் தண்ணீா் பந்தலை மாவட்டப் பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் வியாழக்கிழமை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் பி.எம்.சரவணன், மகளிா் தொண்டரணி மாநில துணைச் செயலா் விஜிலா சத்தியானந்த், மாலைராஜா, சுப.சீதாராமன், குமாரசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்02ற்ல்ம்

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதியில் தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்குகிறாா் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com