பாளை. அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி அருகேயுள்ள அலங்காரப்பேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து. தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (48). இத்தம்பதி கடந்த 28ஆம் தேதி ரெட்டியாா்பட்டி திருமால்நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளனா். பின்னா் ரெட்டியாா்பட்டி நான்கு வழிச்சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, டிவிஎஸ் நகா் மேம்பாலம் பகுதியில் எதிா்பாராமல் பைக்கிலிருந்து பேச்சியம்மாள் தவறி கீழே விழுந்தாராம். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com