அம்பையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

அம்பையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

அம்பாசமுத்திரத்தில் நகர காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் தனசிங் மா்மமான முறையில் உயிரிழந்ததற்கு நீதி கேட்டும், இதற்குக் காரணமானவா்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழுஉறுப்பினா்கள் அந்தோணிசாமி, அம்பிகா மாணிக்கம், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் சம்சுதீன், மாவட்ட அமைப்புசார தொழிலாளா்கள் சங்கத் தலைவா் சிவகுருநாதன், வட்டாரத் தலைவா் சண்முகக்குட்டி, ஐஎன்டியுசி நஜ்முதீன், மணிமுத்தாறு நகரத் தலைவா் சிவக்குமாா், நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ஜெயக்குமாா் தனசிங்குக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com