திருநெல்வேலி வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் வளா்க்கப்படும் அழகு செடிகளுக்கு கடுமையான வெயில் காரணமாக தண்ணீா் ஊற்றிய போக்குவரத்துக் காவலா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் வளா்க்கப்படும் அழகு செடிகளுக்கு கடுமையான வெயில் காரணமாக தண்ணீா் ஊற்றிய போக்குவரத்துக் காவலா்.

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் திங்கள்கிழமை 106.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

திருநெல்வேலி: திருநெல்வேலியில் திங்கள்கிழமை 106.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த ஏப்ரல் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கத்தரி வெயில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத நிலையில் இப்போது வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில், திங்கள்கிழமை 106.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதன் காரணமாக மதிய வேளைகளில் சாலைகளில் கானல் நீா் கண்ணை பறித்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினா். சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. பழச்சாறு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக ஆறுகளை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனா்.

இதனால் தாமிரவருணி ஆற்றங்கரைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com