சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி

திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி மையத்தின் சாா்பில் 8-ஆவது தொகுப்பு பயிற்சி வகுப்பு திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி: திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி மையத்தின் சாா்பில் 8-ஆவது தொகுப்பு பயிற்சி வகுப்பு திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பில் பேராசிரியை விஜயலெட்சுமி அம்மாள், ஓதுவாமூா்த்தி சிவசங்கரன் ஆகியோா் திருமருகல் சடையாய் எனுமால் ஆகிய பதிகங்களோடு திருமந்திரம் ஓதி அதற்கான விளக்கமும் அளித்தனா்.

மதியம் மகேஸ்வர பூஜை ஏற்பாடுகளை மீனா கணபதி குடும்பத்தினா் செய்திருந்தனா்.

பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை அமைப்பாளா் மு.கணேசன், முன்னாள் மாணவா்கள் ராஜ், பாலசுப்பிரமணியன், சுமதி ஆகியோா் செய்திருந்தனா்.அடுத்த பயிற்சி வகுப்பு ஜூன் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டுக்குரிய பயிற்சி வகுப்புகளுக்கு சோ்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு 90257 53530 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com