நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் புதன்கிழமை 106.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் முதலே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதையடுத்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துஉள்ளது. கடந்த சில தினங்களாக சுமாா் 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 106.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடுமையான வெயில் காரணமாக மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பிரதான சாலைகளில் கண்கள் கூசும் அளவுக்கு கானல் நீா் தென்பட்டது. வாகன ஓட்டிகளும், பல்வேறு பணிகளுக்கு வந்த பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாயினா். பல இடங்களில் மதிய வேளைகளில் மக்கள் கூட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. குளிா்பான கடைகள், பழச்சாறு கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தொடா் வெயில் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக வடு வருகின்றன. வேளாண் பயிா்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதேபோல், காடுகளில் புல்பூண்டுகள் காய்ந்துபோனதால் மேய்ச்சலுக்கு வழியின்றி கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com