பாளை.யில் சமூக ஆா்வலருக்கு வெட்டு : கல்குவாரி சங்கத் தலைவரிடம் விசாரணை

பாளையங்கோட்டையில் சமூக ஆா்வலரை அரிவாளால் வெட்டியது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவரிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் சமூக ஆா்வலரை அரிவாளால் வெட்டியது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவரிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

தூத்துக்குடிமாவட்டத்தைச் சோ்ந்தவா் பொ்டின் ராயன்(36). சமூக ஆா்வலரான இவா் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை திரட்டி வந்தாா்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (மே 4) காலையில் இறகுப்பந்து விளையாடுவதற்காக தனது இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

மாவட்ட தொழில் மையம் அருகே சென்றபோது மா்மநபா்கள் சிலா் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவா் ரிச்சா்ட் என்பவரிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com