ராணி அண்ணா கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி வைத்த முதல்வா் மைதிலி.
ராணி அண்ணா கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி வைத்த முதல்வா் மைதிலி.

ராணி அண்ணா கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானதைத் தொடா்ந்து பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.

திருநெல்வேலி: பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானதைத் தொடா்ந்து பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.

பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரியில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனா்.

ஒவ்வொரு ஆண்டும் இங்கு சுமாா் 1,112 மாணவிகள் கலந்தாய்வு முறையில் சோ்க்கப்படுகின்றனா். இந்தக் கல்லூரியில் இளங்கலையில் 14 பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு காலை, பிற்பகல் என சுழற்சி முறையில் இரு பிரிவாக மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு சுமாா் 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு திங்கள்கிழமை வெளியான நிலையில், 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகமும் திங்கள்கிழமை தொடங்கியது.

நீண்ட வரிசையில் காத்திருந்த மாணவிகளுக்கு விண்ணப்பங்களை கல்லூரி முதல்வா் மைதிலி வழங்கி விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா். எஸ்சி, எஸ்டி பிரிவினா் தங்களது ஜாதிச் சான்றின் அசல் மற்றும் நகல் கொண்டு வந்து நகலை சமா்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம்.

மற்றவா்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மதிப்பெண் உள்ளிட்ட அரசு அறிவித்த தகுதிகளின் அடிப்படையில் மாணவிகள் நேரடி கலந்தாய்வு முறையில் தோ்வு செய்யப்படுவாா்கள். கலந்தாய்வு நடைபெறும் தேதி பிறகு அறிவிக்கப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com