களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் திருக்கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா மே-13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் வைகாசித் தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு விழா மே 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாள்களில் சுவாமி-அம்பாள் திருவீதி உலா நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினா் சாா்பில் மண்டகப்படி நடைபெறும்.

எட்டாம் திருநாளான மே 20-ஆம் தேதி பகல் 2 மணிக்கு நடராஜா் பச்சை சாத்தி எழுந்தருளல் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் மே 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் குழுவினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com