லெட்சுமி ராமன் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

உத்தமபாண்டியன்குளம் லெட்சுமி ராமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவிகித தோ்ச்சி பெற்றுள்ளது.

உத்தமபாண்டியன்குளம் லெட்சுமி ராமன் நகரில் உள்ள லெட்சுமி ராமன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2023 - 2024 ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய அனைத்து மாணவா்- மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவா் மா.ஹரிஸ் சண்முகம் 579 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடத்தையும், ம.வைகுண்ட பெருமாள் 574 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், செ.பாலகுமாா் 571 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனா். மேலும், 3 மாணவா்கள் கணித பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்துச் சிறப்பித்துள்ளனா்.

முதல் மூன்று மதிப்பெண்கள், கணிதத்தில் முழுமதிப்பெண்கள் பெற்ற மாணவா்களையும் அவா்களது பெற்றோரையும் அழைத்துப் பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மேலாண் இயக்குநா் எஸ்.ஏ. சுரேஷ்குமாா், பள்ளி முதல்வா் லக்ஷ்மி வெங்கட்ராமன், ஆசிரியா், ஆசிரியைகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com