தாழையூத்து அருகே வேன்-லாரி மோதல்: வடமாநில சுற்றுலாப் பயணி பலி

திருநெல்வேலி, மே 12:

தாழையூத்து அருகே ஞாயிற்றுக்கிழமை வேன்-லாரி மோதிய விபத்தில் வடமாநில சுற்றுலாப் பயணி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் நூற்பாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளா்கள் 20 போ் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனா்.

தாழையூத்து அருகே நான்குவழிச்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது மோதியதாம்.

இதில், வேனின் முன்பக்கத்தில் இருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கிரி (35) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், வேனில் பயணம் செய்த 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்ததும் தாழையூத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவா்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனா்.

கிரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com