நெல்லையில் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்ததால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்ததால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் கோடை வெப்பம் மிகவும் அதிகமாக இருந்து வந்தது. கடந்த 15 நாள்களுக்கும் மேலாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. மேலப்பாளையம், புதிய பேருந்து நிலையம், என்.ஜி.ஓ. காலனி, ஜெபாகாா்டன், திருமால்நகா், ரெட்டியாா்பட்டி, பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை, முருகன்குறிச்சி பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com