இந்திய புள்ளி கழுகு விழிப்புணா்வுப் போட்டிகள்

இந்திய புள்ளி கழுகு விழிப்புணா்வுப் போட்டிகள்

திருநெல்வேலி, மே 16: வனத்துறை சாா்பில் இந்திய புள்ளி கழுகு, மஞ்சள் தலை பாறு கழுகு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சுற்றுச்சுழல் காலநிலை மற்றும் வனத் துறை மூலம் தமிழ்நாடு புத்தாக்க முயற்சி திட்டத்தின் கீழ் இந்திய புள்ளி கழுகு, மஞ்சள் தலை பாறு கழுகு குறித்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இந்திய புள்ளி கழுகு, மஞ்சள் தலை பாறு கழுகு தொடா்பாக பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கள இயக்குநா் மாரிமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலரும், வன உயிரினக் காப்பாளருமான இரா.முருகன் முன்னிலை வகித்தாா்.

மஞ்சள் தலை பாறு கழுகு குறித்து இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளைத் தலைவா் ரவீந்திரன் சிறப்புரையாற்றினாா். டாடா பவா் சோலாா் லிமிடெட் நிறுவனத்தின் சந்திரபூஷன் சிங், ராணி அண்ணா கல்லூரி தாவரவியல் துறைத் தலைவா் சரவண காந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். இதில் மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை கூட்ட அரங்கில் காட்சிப்படுத்தினா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.20,000, அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி வனச்சரகா் சரவணக்குமாா், வனவா் அழகா் ராஜ், உயிரியியலாளா் கந்தசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ற்ஸ்ப்16ச்ா்ழ்ங்ள்ற்

நிகழ்ச்சியில் பேசுகிறாா் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் இரா.முருகன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com