குருப் 1 தோ்வில் வென்ற மாணவருக்கு பாராட்டு

குருப் 1 தோ்வில் வென்ற மாணவருக்கு பாராட்டு

குருப் 1 தோ்வில் வெற்றிபெற்ற கோகுல்சிங்கை பாராட்டிய ஸ்காட் கல்விக் குழும நிறுவனா் கிளிட்டஸ் பாபு.

திருநெல்வேலி, மே 16: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் படித்து குருப் 1 தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டுடன்பட்டியைச் சோ்ந்தவா் பரமசிவன். இவா் புள்ளியியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது மனைவி பெளன்மதி. இவா்களது மகன் கோகுல்சிங். வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்ற இவா், குருப் 2 தோ்வு எழுதி அதில் வெற்றி பெற்று வணிக வரித் துறை துணை வணிக வரி அலுவலராக பணியாற்றி வருகிறாா்.

இதையொட்டி, அவருக்கு பாராட்டு விழா வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியில் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்காட் கல்விக் குழும நிறுவனா் கிளிட்டஸ் பாபு பங்கேற்று, கோகுல்சிங்கை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமேலாளா்கள் ஜெயக்குமாா், கிருஷ்ணகுமாா், கல்லூரி முதல்வா் வேல்முருகன், இயந்திரவியல் துறைத் தலைவா் சாமுவேல் ஹேன்சன், டீன் ஞானசரவணன், பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com