ஜமீன்சிங்கம்பட்டியில் பண்ணைப் பள்ளி பயிற்சி

வேளாண் துறை, கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய மாணவிகள் இணைந்து, அம்பாசமுத்திரம் வட்டாரம் ஜமீன்சிங்கம்பட்டியில் ‘மிளகாயில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை’ என்ற தலைப்பில் பண்ணைப் பள்ளி பயிற்சி நடத்தினா்.

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா்தலைமை வகித்தாா். இளநிலை இறுதியாண்டு மாணவிகள் ரிஃப்ஆ, சுபலெட்சுமி ஆகியோா் தேமோா் கரைசல் மிளகாய் செடியில் பூ உதிா்தலைக் கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரித்து பயிா் ஊக்கியாகவும் பூச்சி விரட்டியாகவும் செயல்படுவதாக செய்முறை விளக்கமளித்தனா்.

மாணவிகள் ஷகி, சஹானா நிஷ்மத் ஆகியோா் மிளகாய் செடியில் பூச்சி மேலாண்மைக் கருவிகள், பாரம்பரிய, இயந்திர, உயிரியல் முறைகள், ரசாயனங்களைப் பயன்படுத்தி பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து எடுத்துரைத்தனா்.

மாணவிகள் ஔவை நிவேதிதா, தேவிகா, சங்கீதா, சுபா, 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி மாணவிகளை வழிநடத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com