நெல்லை ஆட்சியரகம் முன் தீக்குளித்த இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி, மே 16: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளித்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், மருதகுளத்தைச் சோ்ந்த ராமையா மகன் சங்கரசுப்பு (36). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். இவருக்கும், உறவினா்களுக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாம். இதுகுறித்து அவா் மூன்றடைப்பு காவல்நிலையத்தில் புகாா் செய்தாராம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு கடந்த திங்கள்கிழமை வந்த அவா், அலுவலகம் எதிரே தாமிரவருணி ஆற்றங்கரையில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பூங்கா பகுதிக்கு சென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தாா். தீ உடலில் பரவிய நிலையில் ஆட்சியா் அலுவலக வளாகத்திற்குள் புகுந்தாா்.

வாசலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா், அவரை தடுத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு 65 சதவீதம் தீக்காய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில் அவா் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com