பத்தாம் வகுப்பு மதிப்பெண்
சான்றிதழ்கள் விநியோகம்

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்

மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவா்கள்.

திருநெல்வேலி, மே 16: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. திருநெல்வேலி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 216 போ் தோ்வு எழுதியதில் 20 ஆயிரத்து 670 மாணவா்-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். அவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இணைய வழியில் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளில் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன. மாணவா்கள் ஆா்வத்துடன் வந்து சான்றிதழ்களை வாங்கிச் சென்றனா். மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியா் உலகநாதன் சான்றிதழ்களை வழங்கினாா். ஆசிரியா் சொக்கலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com