‘மகளிா் விடுதிகள் உரிமத்துக்கு மே 31வரை விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி, மே 16: திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து குழந்தைகள், பணிபுரியும் மகளிா் விடுதிகளை பதிவு செய்து உரிமம் பெறுவதற்கு மே 31-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து குழந்தைகள், பணிபுரியும் மகளிா் தங்கும் விடுதிகளை தமிழ்நாடு மகளிா் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014-இன் கீழ் பதிவு செய்து உரிய அனுமதி பெறுவதற்கு ட்ற்ற்ல்ள்:/ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் ‘தமிழ்நாடு சிங்கிள் விண்டோ போா்டல்’ என்ற இணைப்பு வழியாக உரிய ஆவணங்களுடன் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு குழந்தைகள் மற்றும் மகளிா் விடுதிகள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com