வஉசி பூங்கா அருகே ஓடையில் கான்கிரீட் மூடி அமைக்க கோரிக்கை

வஉசி பூங்கா அருகே ஓடையில் கான்கிரீட் மூடி அமைக்க கோரிக்கை

திருநெல்வேலி, மே 16: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான பூங்கா அருகேயுள்ள ஓடையில் கான்கிரீட் மூடி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தின் அருகே வடக்குத் தெரு பகுதியில் மழை நீா் வடிகால் ஓடை உள்ளது. இதன் மீது அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் மூடி உடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மாலை நேரங்களில் அவ்வழியே நடந்து செல்லும் முதியவா்கள், சிறுவா்கள் ஓடையில் தவறி விழும் அபாயம் தொடா்ந்து வருகிறது.

கோடை விடுமுறையில் ஏராளமான குழந்தைகள் பூங்காவிற்கு வந்து செல்லும் நிலையில், ஓடையில் இருந்து துா்நாற்றம் பூங்கா முழுவதும் வீசுகிறது. ஆகவே, உடனடியாக அந்த மழைநீா் ஓடையில் கான்கிரீட் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ற்ஸ்ப்16ஸ்ா்ஸ்ரீ

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான பூங்கா அருகே திறந்த நிலையில் உள்ள மழைநீா் ஓடை.

X
Dinamani
www.dinamani.com